News April 7, 2025
பிரபல இயக்குநர் டி.கே.வாசுதேவன் காலமானார்!

மலையாள இயக்குநர் டி.கே.வாசுதேவன் (89) காலமானார். நடிகர், கலை இயக்குநர், இயக்குநர் என 1960களில் மலையாள திரையுலகின் முக்கிய அங்கமாக வாசுதேவன் திகழ்ந்தார். மிகவும் பிரபலமான ஃபேமஸான ‘செம்மீன்’ படத்தில் இவர் அசோசியேட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். என்டே கிராமம், விஸ்வரூபம் போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார். வாசுதேவன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
Similar News
News April 10, 2025
78,800 வரை சம்பளம்: மத்திய அரசில் 558 காலியிடங்கள்!

ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (ESIC) 558 ஸ்பெஷலிஸ்ட் கிரேட் II பதவிகளுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு, சம்மந்தப்பட்ட மருத்துவ துறையில் முதுகலை டிகிரி முடித்து, 5 வருட அனுபவத்துடன் 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும். மாதம் ₹67,000 – ₹78,800 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
News April 10, 2025
உங்களுக்கு குபுகுபுனு வியர்த்து ஊத்துதா?

சம்மர் சீசனின் பெரிய பிரச்னையான வியர்வையில் சில நன்மைகளும் உள்ளது: தோலில் இருந்து வியர்வை சுரப்பதால், உடலின் வெப்பநிலை குறைகிறது *அதிகப்படியான வியர்வை சருமத்தை பளபளப்பாக்கும். கூடுதலாக சருமத்தின் செல்களுக்கு ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்*கடினமான உழைப்பால் தான், அதிகப்படியான வியர்வை வெளியேறும். அது இதயத்திற்கு நல்லதே. ஆனால், எப்போது, எவ்வளவு வியர்க்கிறது என்பதில் கவனம் வேண்டும்.
News April 10, 2025
அரசு பள்ளி மாணவி தற்கொலை

சென்னையை அடுத்த குன்றத்தூரில் தேர்வு பயத்தில் திவ்யதர்ஷினி என்ற அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை 10ஆம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வு எழுதவிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என்பதை ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். தைரியமாக தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என கல்வியாளர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.