News April 26, 2025
பிரபல இயக்குநரும், நடிகருமான நாகேந்திரன் காலமானார்!

பிரபல இயக்குநர் நடிகர் நாகேந்திரன் காலமானார். இவர் சரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். விமல் நடிப்பில் 2015-ல் வெளிவந்த ‘காவல்’ படத்தின் மூலம் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமாகினார். இவர் தற்போது மரணமடைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். நாகேந்திரனின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP.
Similar News
News November 23, 2025
நம்மிடம் இருக்க வேண்டிய அவசர உதவி எண்கள்

அவசர உதவி எண்கள், பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகின்றன. இவை மருத்துவ அவசரம், விபத்து போன்ற அவசர நிலைகளில், உடனடி உதவியை அணுக வழிகாட்டுகின்றன. சரியான நேரத்தில் உயிரை பாதுகாக்க உறுதுணையாக உள்ள உதவி எண்கள் என்னென்ன, அவை எதற்கு பயன்படுகின்றன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 23, 2025
சண்டிகர் யாருக்கு சொந்தம்? விளக்கம்

பஞ்சாப், ஹரியானாவின் பொதுவான தலைநகராக சண்டிகர் உள்ளது. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், புதுச்சேரி உள்ளிட்ட பிற யூனியன் பிரதேசங்களை போல சண்டிகரையும் மாற்ற, மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதை, பஞ்சாப் பாஜக, AAP உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. ஆனால், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
News November 23, 2025
பள்ளி மாணவி கர்ப்பம்.. 19 வயது பையன் சிக்கினான்

திருச்சியில் <<18313662>>பள்ளி மாணவி கர்ப்பமான<<>> செய்தி அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதேபோன்று மற்றொரு சம்பவம் கடலூர், குறிஞ்சிப்பாடி அருகே நடந்துள்ளது. 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமிக்கும், 19 வயது இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியதால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். விஷயம் வெளியே தெரிந்ததை அடுத்து, இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


