News August 27, 2025

பிரபல கிரிக்கெட்டருக்கு புற்றுநோய்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

image

கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருக்கும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2015-ல் ODI உலக கோப்பையை வென்ற ஆஸி., கேப்டனான இவர், மூக்கில் இருந்து புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதி நீக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். முன்னதாக 2006-ல் இவருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Similar News

News March 3, 2026

EXCLUSIVE: சந்திர கிரகணம் போட்டோஸ்

image

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. இந்தியாவில் பகல் பொழுதாக இருந்ததால் அதிக நேரம் பார்க்க முடியவில்லை. அதேநேரம் வெளிநாடுகளில் பிறை வடிவம், ரத்த வண்ணத்தில் காணப்பட்ட நிலவை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அதனை ஆச்சரியத்துடன் போட்டோ எடுத்து தங்களது SM பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அப்படியான போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். அதனை ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE IT

News March 3, 2026

தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது: EPS

image

<>நெல்லை <<>>அருகே பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு என்பது ஒரு விஷயமே இல்லை என்பது போலவே, கடந்த 5 ஆண்டுகளை திமுக அலட்சியமாக கடந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல விளம்பரங்கள் செய்யப்படும் நிலையில், உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுவதாகவும் விமர்சித்துள்ளார்.

News March 3, 2026

காதலனை கொலை செய்த நடிகை சிக்கினார்

image

பெங்களூருவில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து லிவ் -இன் பார்ட்னரை தீர்த்துக் கட்டிய துணை நடிகை ஊர்வசி கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை பிரிந்த மோகன கிருஷ்ணாவும், கணவனை பிரிந்த ஊர்வசியும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே, வினய் என்பவருடன் ஊர்வசிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை மோகன கிருஷ்ணா கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஊர்வசி, வினய்யுடன் சேர்ந்து திட்டம் தீட்டி அவரை கொன்றுள்ளார்.

error: Content is protected !!