News August 31, 2025
பிரபல நடிகை பிரியா காலமானார்

மராத்தி, ஹிந்தி சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியா மராத்தே(38) மும்பையில் இன்று காலமானார். கேன்சருக்கு சிகிச்சை பெற்ற அவர், இளவயதில் உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Kasamh Se, Ya Sukhano ya, Char Divas Sasuche உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மகாராஷ்டிராவின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பிரியாவின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
Similar News
News August 31, 2025
‘தக் லைஃப்’ படத்தின் புதிய சாதனை

‘தக் லைஃப்’ படத்தின் முத்த மழை பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள சின்மயி இச்சாதனையை சாத்தியமாக்கிய கடவுள், ரஹ்மான் சார் மற்றும் நல் உள்ளங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறியுள்ளார். படத்தில் இப்பாடல் இடம்பெறவில்லை என்றாலும் ஆல்பமில் வெளியானது. உங்களுக்கு முத்த மழை தீ வெர்ஷன் பிடிக்குமா? சின்மயி வெர்ஷன் பிடிக்குமா?
News August 31, 2025
வெளுத்துவிட்ட ஆயுஷ் படோனி.. டபுள் சதம் விளாசல்

துலீப் டிராபி தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில், North Zone வீரர் ஆயுஷ் படோனி டபுள் சதம் வெளுத்துள்ளார். East Zone அணிக்கு எதிரான ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில், 223 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டரி, 3 சிக்ஸர் என 204 ரன்களை அடித்துள்ளார். மேலும், யஷ் துல் மற்றும் அங்கித் குமாரும் சதம் விளாசிய நிலையில், போட்டி டிரா ஆனது. இதனால் North Zone நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
News August 31, 2025
Tech Talk: இந்த 5 தகவல்களை ChatGPT-யிடம் சொல்லிடாதீங்க..

ChatGPT-யிடம் சாதாரண கூட்டல் கணக்கில் தொடங்கி, மருத்துவ ஆலோசனை வரை கேட்க தொடங்கிவிட்டனர். ஆனால் தகவல் திருட்டை தடுக்க இதுபோன்ற AI தளங்களில் பகிரவே கூடாத விஷயங்கள் சில உள்ளன. ▶தனிப்பட்ட அடையாள தகவல்கள் ▶வங்கி கணக்கு எண், முதலீட்டு விவரங்கள் ▶பணிபுரியும் நிறுவனம் சார்ந்த தகவல்கள் ▶மருத்துவ குறிப்புகள், நோயின் விவரம் ▶Password விவரங்களை பகிர வேண்டாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.