News March 26, 2025
பிரபல நடிகை, மாடல், டான்சர் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை, டான்சர் மற்றும் மாடலான சிந்தியானா சாண்டேஞ்சலோ (58) காலமானார். திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஹாஸ்பிடலில் அவர் மரணமடைந்தார். அண்மையில் அவர் மேற்கொண்ட காஸ்மெடிக் இன்ஜக்ஷன் சிகிச்சையின் பக்க விளைவே இவர் மரணத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் எம்டிவி டாப் 10 ஆல்பங்களில் ஒரே நேரத்தில் இவரின் 3 பாடல்கள் இடம்பெற்றதே இதுவரை சாதனையாக உள்ளது.
Similar News
News March 30, 2025
சாய் பல்லவியின் எனர்ஜிக்கு காரணம் இதுதான்!

தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிப் படங்களில் நடித்துவரும் சாய் பல்லவி, தனது சிம்பிளான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ரௌடி பேபி உள்ளிட்ட பாடல்களில் அதிக எனர்ஜியுடன் நடனமாடி அவர் அசத்தி இருப்பார். தினமும் தவறாமல் 2 லிட்டர் இளநீர் குடிப்பதே, அவரது எனர்ஜியின் ரகசியமாம். மேலும், தன்னுடைய டயட்டில் அதிகப்படியான காய்கறிகள் மற்றும் பழங்களை அவர் சேர்த்துக் கொள்கிறாராம்.
News March 30, 2025
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…!

8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் காட்டில் பணமழை தான். அவர்களின் ஊதியம், ஓய்வூதியம் சுமார் 2.89 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000-ல் இருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்கும் எனவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000-ல் இருந்து ரூ.25,740 ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது. 8வது ஊதியக் குழு 2026 ஏப்ரலில் அமைக்கப்படும் என தெரிகிறது.
News March 30, 2025
ஓய்வு பெற்றார் சரத் கமல்

அர்ஜூனா, பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருதுகளை வென்றுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வு பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர், 10 முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருக்கிறார். இன்று சென்னையில் நடைபெற்ற ஸ்டார் கண்டெண்டர் போட்டித் தேர்வில் தோல்வுற்றதையடுத்து, அவர் ஓய்வு பெற்றிருக்கிறார். இவர் காமன்வெல்த் போட்டிகளில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றிருக்கிறார்.