News October 18, 2025

பிரபல நடிகைக்கு திருமணம் முடிந்தது❤️❤️ PHOTOS

image

ஆமிர்கானின் ‘தங்கல்’ படத்தில் அறிமுகமாகி புகழ்பெற்றவர் நடிகை சைரா வாசிம். தேசிய விருது உள்பட பல விருதுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில், தனக்கு திருமணம் முடிந்ததாக இன்ஸ்டாவில் போட்டோஸை அவர் பதிவிட்டுள்ளார். கணவரின் கைகோர்த்தபடி நிலவை பார்க்கும் படத்தை பதிவிட்ட அவருக்கு, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமண போட்டோஸை மேலே ஸ்வைப் செய்து நீங்களும் வாழ்த்துங்கள்!

Similar News

News October 19, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 493 ▶குறள்: ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். ▶பொருள்: பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

News October 19, 2025

International Roundup: காஸாவில் 11 பேரை கொன்ற இஸ்ரேல்

image

*டிரம்ப்பின் குடியுரிமை, பாதுகாப்பு கொள்கைகளை எதிர்த்து பல நாடுகளில் போராட்டம். *பிரிட்டன் இளவரசர் பிரின்ஸ் தனது பட்டத்தை துறந்தார். *பாகிஸ்தான் – ஆப்கன் இடையே கத்தாரில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை. *காஸாவில் 11 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்றது. *இயற்பியல் பரிசு பெற்ற சீன விஞ்ஞானி சென் நிங் யாங் காலமானார். *ஸ்வீடனில் சர்வதேச யூத திரைப்பட விழா திரையிட யாரும் முன்வராததால் ரத்து.

News October 19, 2025

தேர்வுக்குழுவுக்கு செமத்தியான ரிப்ளே கொடுத்த ஷமி

image

ஆஸி.,க்கு எதிரான ODI தொடரில் இடம்பெறாத விரக்தியில் இருந்த ஷமி, தேர்வுக்குழுவிற்கு செமத்தியான மெசேஜ் ஒன்றை தனது பவுலிங் மூலம் தெரிவித்துள்ளார். ரஞ்சி டிராபியில் உத்தரகாண்டிற்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால், அவரது பெங்கால் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேலும், ஷமிக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

error: Content is protected !!