News March 27, 2025

பிரபல நடிகை மரணம்: விலகியது மர்மம்

image

பிரபல ஹாலிவுட் நடிகை பமிலா பாச் கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருந்துவந்த நிலையில், அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் ஏற்பட்ட காயத்தால் அவர் உயிரிழந்ததாக, மரண சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பே வாட்ச், சைரன்ஸ், நைட் ரைடர் உள்ளிட்ட படங்களில் அவரது கேரக்டர்களால், ரசிகர்களிடையே அவர் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 30, 2025

என்னை மிக உயர்ந்தவளாக கருதவில்லை: ஜோதிகா

image

நடிப்பை புறந்தள்ளிவிட்டு குழந்தைகளை வளர்த்தது பற்றி நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார். குழந்தைகளின் மழலைப் பருவத்தில் அவர்களுடன் இருக்க வேண்டியது ஒரு தாயின் கடமை. அதைதான் நானும் செய்தேன். அதை பெருந்தன்மை என சிலர் கூறுகிறார்கள். பெருந்தன்மையாக இருப்பது ஒன்றும் தியாகம் கிடையாது. அது நமது நற்பண்பு மட்டுமே. என்றைக்கும் நான் என்னை உயர்ந்தவளாக கருதியது கிடையாது என ஜோதிகா கூறியுள்ளார்.

News March 30, 2025

மொத்தமாக முடங்கிய ChatGPT

image

பிரபல AI செயலியான ChatGPT முடங்கிவிட்டதாக ஏராளமான பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். டீப் சீக், X-இன் க்ரோக் AI-களின் வரவால் சற்று வரவேற்பு குறைந்த நிலையில், போட்டோக்களை ஜப்பானிய அனிமேஷன் ஸ்டைலில் மாற்றும் Studio Ghibli-style-வை ChatGPT கொண்டுவந்தது. இது மக்களை கவர, ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கானோர் ChatGPT-ஐ பயன்படுத்த இப்போது முடங்கிவிட்டது. உங்களுக்கு வேலை செய்கிறதா?

News March 30, 2025

முட்டை விலை கிடுகிடுவென உயர்வு

image

நாமக்கல்லில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை இன்றும் 5 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு முட்டையின் விலை ₹4.65 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாள்களில் முட்டை விலை 50 காசுகள் உயர்ந்துள்ளதால், நுகர்வோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ₹5 முதல் ₹5.50க்கு விற்கப்பட்ட முட்டை, மொத்த விலை உயர்வால், மேலும் விலையேறும் என அஞ்சப்படுகிறது.

error: Content is protected !!