News April 28, 2025
பிரபல நடிகை பியான்கா காஸ்ட்ரோ காலமானார்

‘RuPaul’s Drag Race’ நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற பிரபல நடிகை பியான்கா காஸ்ட்ரோ(44) காலமானார். பிலிப்பைன்ஸில் பிறந்த பியான்கா, தனது 10 வயதில் தாய், சகோதரருடன் அமெரிக்காவின் குயின்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். பின்னர் பெரும் சிரமத்திற்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்றார். அண்மையில், நோய்த்தொற்றுக் காரணமாக, அவருக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தார். #RIP
Similar News
News September 18, 2025
நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகள் என்கவுண்டர்

பாலிவுட் நடிகை <<17712293>>திஷா பதானி<<>> வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை உ.பி. போலீசார் என்கவுண்டர் செய்தனர். அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும், கேங்ஸ்டர் கோல்டி பிரார் கேங்கைச் சேர்ந்தவர்கள் ஆவர். திஷா பதானியின் தங்கை குஷி பதானி, ஒரு சாமியாருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், அவர்களது வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
News September 18, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 18, புரட்டாசி 2 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.
News September 18, 2025
₹3.28 லட்சம் விலை குறைத்த கார் நிறுவனம்

GST மறுசீரமைப்பு எதிரொலியாக பல்வேறு கார், பைக் நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையை குறைத்து வருகின்றன. அந்த வகையில், SKODA கார் நிறுவனம் விலையை குறைத்துள்ளது. அதன்படி, Kodiaq மாடல் ₹3.28 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், Kylaq – ₹1.19, Slavia – ₹63,000, Kushaq – ₹61,000 வரை விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு வரு 22-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.