News April 5, 2025
பிரபல நடிகர் சஹானா ஸ்ரீதர் காலமானார்

பிரபல நடிகர் சஹானா ஸ்ரீதர் (62) மாரடைப்பால் காலமானார். அழியாத கோலங்கள், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களிலும், தாமரை, சித்தி-2 உள்ளிட்ட டிவி தொடர்களிலும் நடித்துள்ளவர் சஹானா ஸ்ரீதர். சஹானா தொடரில் நடித்து பிரபலமானதால் சஹானா ஸ்ரீதர் என்று அழைக்கப்பட்டார். சென்னையில் வசித்த அவருக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஹாஸ்பிடலில் சேர்த்தபோது மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
Similar News
News April 6, 2025
என்ன ஆகும் இந்திய பங்குச்சந்தைகள்?

டிரம்ப்பின் பொருளாதார முடிவுகளால் உலகம் முழுவதும் உள்ள பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் 1.5% சரிந்தது. ஆனால், இந்திய சந்தைகளில் வர்த்தகம் முடிந்தபின், அமெரிக்க சந்தைகள் 5% சரிவடைந்தன. அதன் தாக்கம், நாளை ( திங்கட்கிழமை) இந்திய சந்தைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
News April 6, 2025
கேரள கால்பந்து ஜாம்பவான் காலமானார்…!

கேரளாவின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான பாபுராஜ்(60), அன்னூரில் காலமானார். கல்லூரி காலத்தில் கால்பந்து விளையாட்டிற்குள் அடியெடுத்துவைத்த அவர், மாநில அணியில் சிறந்த வீரராக செயல்பட்டுள்ளார். கால்பந்தில் நாட்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக கேரளம் உருவானதிலும், 1990, 91 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஃபெடரேஷன் டிராபியை கேரளா வென்றதிலும் பாபுராஜ் முக்கிய பங்காற்றினார்.
News April 6, 2025
59 பேர் கொடூர கொலை…சீரியல் கில்லர் ஒப்புதல்

ரஷ்யாவில் வீடில்லாத மக்கள், போதைக்கு அடிமையானவர்கள், வயதானோர் என 1992 – 2006 வரை 48 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இக்கொலைகளை செய்த அலெக்சாண்டர் பிசிஸ்கின் (50) 2007இல் கைது செய்யப்பட்டார். ‘செஸ்போர்ட் கில்லர்’ என ரஷ்ய ஊடகங்களால் புனைப் பெயரில் அழைக்கப்பட்ட அவர், தற்போது மேலும் 11 பேரை கொலை செய்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இது ரஷ்ய போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.