News April 29, 2025
பிரபல நடிகர் பிரகாஷ் பெண்டே காலமானார்!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் மராத்தி சினிமாவில் மிக பிரபலமாக இருந்த பிரகாஷ் பெண்டே(82) காலமானார். அவர் பாலு, சாட்டக் சாந்த்னி, நடே ஜாட்லே டான் ஜீவ்னே போன்ற மாபெரும் மராத்தி வெற்றி படங்களை இயக்கி, நடித்தும் இருக்கிறார். சினிமா துறையை தாண்டி இவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. மும்பையிலுள்ள பல்வேறு கேலரிகளில் இவரின் ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டுள்ளன. #RIP.
Similar News
News November 20, 2025
ALERT: 5 நாள்களுக்கு இங்கெல்லாம் கனமழை

தென் தமிழகம் மற்றும் காவிரி படுகையில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை தொடர்கிறது. நாளை(நவ.21) நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குடையை ரெடியா வையுங்கள் மக்களே..!
News November 20, 2025
7 நாளில் நிதிஷின் CM பதவி காலியான வரலாறு தெரியுமா?

2000-ல் பிரிக்கப்படாத பிஹார் தேர்தலில் 324 இடங்களில் லாலுவின் கூட்டணி 159 தொகுதிகளில் வென்றிருந்தது. மறுபக்கம், நிதிஷ் இடம்பெற்ற NDA கூட்டணி 151-ஐ வென்றது. ஆனால் இரு கூட்டணிகளும் மெஜாரிட்டியை(163) பிடிக்கவில்லை. இருப்பினும், நிதிஷ் குமாரை CM ஆக்கினார் கவர்னர் வினோத். அதன்பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், 7 நாள்களில் CM பதவியை நிதிஷ் ராஜினாமா செய்தார்.
News November 20, 2025
PM கிசான் ₹2,000 வரவில்லையா? இதை செய்யுங்க

PM கிசான் திட்டத்தின் 21-வது தவணையான ₹2000-ஐ விவசாயிகளுக்கு நேற்று PM மோடி விடுவித்தார். ஆனாலும், சில விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இத்திட்டத்தில் இணைந்து பணம் வராமல் இருந்தால் 1800-180-1551 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது <


