News September 2, 2025
பிரபல நடிகர் காலமானார்.. தமிழ் திரையுலகில் சோகம்

மதன்பாப், கோட்டா சீனிவாச ராவ், சரோஜா தேவி என நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மறைந்ததால் திரையுலகம் சோகத்தில் இருக்கிறது. இந்நிலையில், 80களில் பிரபலமான <<17594155>>நடிகர் குரியகோஸ் காலமானார்<<>>. பல படங்களில் நடித்திருந்தாலும், ‘அவள் சுமங்கலிதான்’ படத்தில் நடித்த குரியகோஸ் பாத்திரம் அவரை மிக ஈர்த்ததால், தனது ரங்கா என்ற பெயருடன் அதனை இணைத்துக் கொண்டார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 15, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 15, பங்குனி 1 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:00 AM & 3:30 PM – 4:30 PM▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்:4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்:12:00 PM – 1:30 PM ▶குளிகை:3:00 PM – 4:30 PM ▶திதி: ஏகாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News March 15, 2026
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு எப்போது?

திமுகவின் தேர்தல் அறிக்கையை கனிமொழி தலைமையிலான குழு தயாரித்து வருகிறது. இதனிடையே திமுகவின் தேர்தல் அறிக்கையை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக CM ஸ்டாலினிடம் கனிமொழி நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் தேர்தல் அறிக்கை ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. அவர் ஒப்புதல் அளித்தவுடன் அறிக்கையை வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.
News March 15, 2026
வார்டு கவுன்சிலரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உங்கள் பகுதி பிரச்சனைகளை சரிசெய்யும் கவுன்சிலருக்கு 2023-ல் இருந்துதான் மாத சம்பளமே தொடங்கப்பட்டது. மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் கவுன்சிலர்களுக்கு மாதம் ₹10,000 சம்பளமாகவும், நகராட்சி கவுன்சிலர்களுக்கு ₹5,000-மும் ஊதியமாக வழங்கப்படுகிறது. நகராட்சி தலைவர்(₹15,000), துணை தலைவர்(₹10,000), பஞ்சாயத்து தலைவர்(₹10,000) துணை தலைவர்களுக்கும்(₹5,000) குறிப்பிட்ட ஊதியம் கொடுக்கப்படுகிறது.


