News April 13, 2025
பிரபல நடிகர் கலைப்புலி ஜி.சேகரன் காலமானார்

பிரபல நடிகரும், இயக்குநருமான கலைப்புலி ஜி.சேகரன் (73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உளவாளி, ஜமீன் கோட்டை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், 2000-ல் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவரான பிறகு சினிமாவில் விநியோகஸ்தர்களின் குரலை ஓங்கச் செய்தவர். ஜி.சேகரன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
FLASH: புதிய குண்டை வீசிய செங்கோட்டையன்

திமுகவில் மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருப்பதாக செங்கோட்டையன் புதிய குண்டை வீசியுள்ளார். அதிமுகவில் மகன், மைத்துனர், மாப்பிள்ளை தலையீடு அதிகமாக உள்ளதாக இபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக சாடினார். மேலும், தன்னால் முடியாததை முடியும் எனச் சொல்லி தன்னையும் மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது எனவும் விமர்சித்தார். செங்கோட்டையனின் இந்த தாக்குதல் அரசியலில் புயலை கிளப்பும் என கூறப்படுகிறது.
News November 3, 2025
தெலங்கானா பஸ் விபத்து.. நெஞ்சை உலுக்கும் போட்டோ!

தெலங்கனாவின் ரங்காரெட்டியில் நிகழ்ந்த <<18183288>>பஸ் விபத்தில்<<>> சிக்கி, 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பரிதாபமாக மரணமடைந்த 15 மாத குழந்தையும், அக்குழந்தையின் தாயாரும் உயிரின்றி கிடக்கும் போட்டோ பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. பஸ் விபத்து நிகழ்ந்த இடத்தில் மரணமடைந்தவர்களின் உடல்கள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடப்பதை பார்க்க முடியாமல், மீட்பு பணியில் ஈடுபடுவோரும் தவித்து வருகின்றனர்.
News November 3, 2025
BREAKING: தமிழகத்தை உலுக்கிய சம்பவம்

கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று 3 இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஏர்போர்ட் பின்புறம் உள்ள சாலையில், மாணவியின் ஆண் நண்பரை கொடூரமாக தாக்கிவிட்டு மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். இளைஞர் கோவை GH-ல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


