News September 21, 2025
விபத்தில் சிக்கினார் நடிகர் ஜோஜு ஜார்ஜ்

பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார். மூணாறு அருகே திரைப்பட படப்பிடிப்பின் போது, ஜீப் கவிழ்ந்த விபத்தில், படுகாயமடைந்த ஜோஜு ஜார்ஜுக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். அவருடன் பயணித்த 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News September 21, 2025
உள்ளாடைக்கும் Expiry டேட் இருக்கு தெரியுமா?

சுத்தமான உள்ளாடைகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளின் (UTIs) அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும், உடலில் வீசும் துர்நாற்றம், அசௌகரியத்தை தவிர்க்க உதவுகிறது. ஒரு உள்ளாடையை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்ற கால வரம்பு இல்லை என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் உள்ளாடைகளை மாற்றுவது சிறந்தது. அதே போல, முகத்திற்கு பயன்படுத்தும் டவலை 6 மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும். SHARE THIS.
News September 21, 2025
வேலைவாய்ப்பு குறித்து TN அரசு போலி விளம்பரம்: அதிமுக

தொழில்துறையில் வேலைவாய்ப்பு, முதலீடுகள் குறித்து திமுக அரசு போலி விளம்பரம் செய்வதாக அதிமுக சாடியுள்ளது. 1,010 ஒப்பந்தங்கள் போடப்பட்டு 34 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாக TRB ராஜா பேசிய நிலையில், TN-ல் 32 லட்சம் தொழில்துறை வேலைகள் மட்டுமே உள்ளதாக ASI தரவுகளை அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது. திமுக ஆட்சியில் 34 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கியதாக கோருவது, கற்பனையே என்று அதிமுக விமர்சித்துள்ளது.
News September 21, 2025
டாஸ்மாக் கடைகளில் இனி ரூல்ஸ் மாறுது!

மதுக்கடைகளில் இனி வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க வைத்து மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதனால், கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா காலத்தில் மதுப்பிரியர்களை வரிசையில் நிற்க வைத்து சமூக இடைவெளியுடன் மது விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த ரூல்ஸ் உங்களுக்கு ஓகேவா?