News September 23, 2025

பிரபல நடிகருக்கு 61 வயதில் திருமணம்

image

பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ்(61), தனது நீண்டநாள் காதலியான அலெக்ஸாண்ட்ரா கிராண்ட்(52) என்பவரை திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2019-ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வரும் நிலையில், மீடியா வெளிச்சம் படாமல் குடும்பத்தினர்& நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. கீனு ரீவ்ஸின் Matrix, John Wick படங்கள் இந்தியாவிலும் பெரும் வெற்றி பெற்றன.

Similar News

News September 23, 2025

பைக் பிரியர்களுக்கு சூப்பர் ஹேப்பி நியூஸ்

image

சர்வதேச பைக் நிறுவனங்கள் மக்களுக்கு தீபாவளி பரிசை அறிவித்துள்ளன. அதன்படி, 350cc-க்கு அதிகமான திறன் கொண்ட பைக்குகளின் விலையை உயர்த்த போவதில்லை என Triumph, KTM, Aprilia நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. GST 2.0-ல் 350cc-க்கு மேல் உள்ள பைக்குகள் மீதான வரியை 28%-ல் இருந்து 40% ஆக அரசு உயர்த்தியது. இருப்பினும், இந்தியாவின் பிரீமியம் பைக் சந்தையை இழக்க விரும்பவில்லை என அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.

News September 23, 2025

‘கைதி 2’ படம் டிராப்?

image

‘கைதி 2’ மற்றும் ஆமிர்கானுடன் லோகேஷ் கனகராஜ் இணையவிருந்த படங்கள் டிராப் ஆனதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. ‘கைதி 2’ கதையில் லோகேஷ் சில மாற்றங்களை செய்ய இருந்ததாகவும், அதற்கு ஹீரோ தரப்பு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல், லோகேஷ் ₹75 கோடி சம்பளம் கேட்டதும் படம் கைவிடப்பட்டதற்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

News September 23, 2025

BREAKING: கூட்டணிக்கு வர TTV-க்கு அழைப்பு

image

டிடிவியை சந்தித்தது பேசியது உண்மைதான் என்று அண்ணாமலை சஸ்பென்ஸை உடைத்துள்ளார். திமுகவை வீழ்த்த, மீண்டும் NDA கூட்டணியில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதற்கு, நவம்பர் மாதத்திற்கு பிறகு பார்க்கலாம் என்று தினகரன் பதிலளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை; அவரின் நல்ல பதிலுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்றார்.

error: Content is protected !!