News March 31, 2025
பிரபல நடிகர் தின்கர்ராவ் மானே காலமானார்

இந்தி, மராத்தி திரையுலகில் பிரபலமான நடிகர் கிரண் மானேவின் தந்தை தின்கர்ராவ் மானே (86) உடல்நலக்குறைவால் காலமானார். இதனை, நடிகர் கிரண் மானே தனது ஃபேஸ்புக்கில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். தின்கர்ராவ் மானேவின் உடல் சத்தாராவில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 6 மணிக்கு மஹுலி கைலாஷ் கல்லறையில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
Similar News
News January 15, 2026
உதகை தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு பொங்கல் விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் யுவராஜ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
News January 15, 2026
தமிழகத்தில் EVM இயந்திரங்கள் சரிபார்ப்பு!

2026 தேர்தலையொட்டி தமிழகத்தில், EVM இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளன. 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகளும், பெல் நிறுவன பொறியாளர்களும் இப்பணியை மேற்கொண்டனர். மொத்தம் 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.16 லட்சம் VVPAT இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
News January 15, 2026
ஸ்மார்ட்போன் விலை அதிகரிக்கும்: Nothing CEO

இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விலைகள் 30% அல்லது அதற்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று Nothing நிறுவனத்தின் CEO கார்ல் பேய் கணித்துள்ளார். memory, storage உள்ளிட்டவைகளின் தேவையை AI அதிகரித்துள்ளது. இதனால், memory, storage சிப்களின் விலை அதிகரிப்பால் ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு செலவுகளும் அதிகமாகும். எனவே, போனின் அம்சங்களை குறைக்க வேண்டும் அல்லது விலையை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


