News October 21, 2025
பிரபல நடிகர் அஸ்ரானி காலமானார்.. PM மோடி இரங்கல்

பாலிவுட் <<18059439>>நடிகர் கோவர்தன்<<>> அஸ்ரானியின் மறைவால், மிகவும் சோகத்தில் இருப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மிக சிறந்த நடிகரான அஸ்ரானி தனது நகைச்சுவையின் மூலம் பலரையும் சிரிக்க வைத்துள்ளதாக குறிப்பிட்டு, இந்திய சினிமாவிற்கு அவரின் பங்களிப்பு ஈடுயிணையற்றது எனவும் பதிவிட்டுள்ளார். ஷோலே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற அஸ்ரானி மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News October 21, 2025
விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கையாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
‘ஆரஞ்சு அலர்ட்’ அப்படின்னா என்ன?

24 மணி நேரத்திற்கு 11.5 செ.மீ., – 20.4 செ.மீ., வரை பெய்யும் மழைக்கு (காற்றின் வேகம் மணிக்கு 41- 61 கி.மீ) <<18063158>>ஆரஞ்சு அலர்ட்<<>> விடுக்கப்படுகிறது. இதனை பெருமழை அல்லது மிகக் கனமழை என்று வானிலை ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். SHARE IT
News October 21, 2025
செங்கல்பட்டில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை லீவு விடப்பட்டுள்ளது. SHARE IT