News March 29, 2024
கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்ற இளைஞர் EMI முறையில் செல்ஃபோன், மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை வாங்கியிருந்ததாக தெரிகிறது. தவணையை சரியாக திருப்பி செலுத்தாதால் கடன் கொடுத்தவர் ராஜேஷின் வீடு தேடி வந்து அவரது தாய் & தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
Similar News
News October 16, 2025
தீபாவளிக்கு மொறு மொறு முறுக்கு ரெசிபி!

தீபாவளிக்கு முறுக்கு ருசிக்காவிட்டால் , பண்டிகை என்ற திருப்தியே கிடைக்காது. எண்ணெய் குடிக்காமல், மொறு மொறு முறுக்கு செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம். பொருள்கள்: பச்சரிசி, உளுந்து, எள், பொறி கடலை, வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு, தண்ணீர், கடலை எண்ணெய். செய்முறையை SWIPE செய்து பார்க்கவும்.
News October 16, 2025
டிஜிட்டல் அரஸ்ட்: முதியவரிடம் ₹58 கோடி மோசடி

வசதிபடைத்த முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. சமீபத்தில் மும்பையில் வசிக்கும் 72 வயது தொழிலதிபருக்கு சிபிஐ பெயரில் வீடியோ கால் வந்துள்ளது. அதில் நீங்கள் பண மோசடியில் ஈடுபட்டதாக, போலி ஆவணங்களை காட்டி மிரட்டி ₹58 கோடியை பறித்துள்ளனர். இதுதொடர்பாக இதுவரை 3 பேரை கைது செய்த காவல்துறை, முக்கிய குற்றவாளிகளை தேடி வருகிறது. மக்களே உஷார்
News October 16, 2025
சத்தீஸ்கரில் ஒரேநாளில் 171 நக்சல்கள் சரண்

சத்தீஸ்கரில் இன்று ஒரே நாளில் 171 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். அரசமைப்பை நம்பி வன்முறையை கைவிட்டு வந்தவர்களை பாராட்டுவதாகவும், மோடி அரசின் தீவிர நடவடிக்கையால் நக்சலிசம் அழிவின் இறுதியில் உள்ளதாகவும் கூறியுள்ளார். மீதமுள்ள நக்சல்களும் சரணடைய வேண்டும் என வலியுறுத்திய அவர், இல்லையென்றால் ஆயுதப்படைகள் அவர்களை வீழ்த்தும் எனவும் எச்சரித்துள்ளார்.