News August 6, 2024
மூன்றடைப்பு அருகே சிக்கிய ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள்

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஆக.,6) அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த பொலிரோ வாகனத்தில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, வாகனத்தில் வந்த சிவகாசியை சார்ந்த சீமைசாமி, கோபாலகிருஷ்ணன் & சங்கரன்கோவிலை சேர்ந்த கிருஷ்ண சங்கர், தங்கராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து மூன்றடைப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
நெல்லை அருகே தலைகுப்புற கவிழ்ந்த லாரி

குமரியில் இருந்து வெள்ளரிக்காய் ஏற்றிகொண்டு லாரி ஒன்று நெல்லை நோக்கி வந்துள்ளது. ராதாபுரம் அருகே உள்ள காவல்கிணறு புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வெள்ளரிக்காய்கள் சிதறி லாரி பலத்த சேதம் அடைந்தது. காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
News January 23, 2026
நெல்லை : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

நெல்லை மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 23, 2026
நெல்லை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

நெல்லையில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (ஜன.24) நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல் உள்பட பல்வேறு சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT


