News October 14, 2025
போலி மருந்துகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் 3,000 நிறுவனங்களில் தயாரிக்கப்படும் 10,500 மருந்துகளை ஆய்வு செய்ய 1,467 ஆய்வாளர்களே பணியில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. TN-ல் 112 மருந்து ஆய்வாளர்கள் உள்ளனர். Coldrif Syrup குடித்த 22 குழந்தைகள் பலியான சம்பவத்தால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் முறையாக ஆய்வு செய்யாததால் பல மாநிலங்களில் போலி & தரமற்ற மருந்துகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Similar News
News October 14, 2025
BREAKING: திமுக அமைச்சருடன் இபிஎஸ் சந்திப்பு

சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து இபிஎஸ், உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கடந்த மாதம் திடீரென மயங்கி விழுந்த துரைமுருகன், கையில் காயம் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அரசியல் களத்தில் இரு கட்சிகளும் எதிர் துருவங்களாக பயணம் செய்தாலும், திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகனை, EPS சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தது ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்படுகிறது.
News October 14, 2025
எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு 7 மணி அளவில் ஜம்மு காஷ்மீர், மச்சில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஊடுருவலை முறியடித்தனர். பனிப்பொழிவை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News October 14, 2025
பினராயி மகன் மீது நடவடிக்கை எடுக்க காங்., கடிதம்

பண முறைகேடு வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகன் விவேக் கிரண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ED-க்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. 2023-ல் விவேக் கிரண் மீது பண மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால், இதுதொடர்பான விசாரணைக்கு அவர் இதுவரை ஆஜராகவில்லை. இந்நிலையில், வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று காங்., கோரிக்கை விடுத்துள்ளது.