News April 8, 2025
தமிழகத்தில் போலி என்கவுண்ட்டர்: சீமான்

தமிழ்நாட்டில் நடப்பது அனைத்துமே போலி என்கவுண்ட்டர்கள்தான் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல் வழக்கை முடிப்பதிலேயே மும்முரம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவர்களது குற்றம் தெளிவுபடுத்தப்படவில்லை என்று சீமான் பேசியுள்ளார்.
Similar News
News November 23, 2025
BREAKING: விஜய் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்

காஞ்சி நிகழ்ச்சியில், தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெறப்போகும் சில அறிவிப்புகளை விஜய் வெளியிட்டுள்ளார். அதன்படி, *தவெக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு நிரந்தர வீடு *ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் இருக்க வேண்டும் என்பது லட்சியம் *வீட்டிலும் ஒருவருக்கு நிரந்தர வருமானம் *ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு கட்டாய பட்டப்படிப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளார்.
News November 23, 2025
திமுக மீது வன்மம் இல்லை: விஜய்

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் எம்ஜிஆர் பாடலுடன் விஜய் தனது பேச்சை தொடங்கினார். அப்போது, திமுகவினருடன் தவெகவினருக்கு தனிப்பட்ட முறையில் எந்த வன்மமும் இல்லை. ஆனால், திமுகவினருக்கு வேண்டுமானால் தவெக மீது தனிப்பட்ட வன்மம் இருக்கலாம் என்று சாடினார். மேலும், கொள்கை என்றால் என்ன விலை என்று கேட்கும் திமுகவின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான் என்று விமர்சித்தார்.
News November 23, 2025
அனைத்து சாதியினரையும் நீதிபதியாக்கிய கவாய்!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரது பதவிக்காலத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, பல மாநில ஐகோர்ட்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 129 பேர் பரிந்துரைக்கப்பட்டு, 93 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் SC பிரிவினர், 11 OBC, 13 சிறுபான்மையினர் மற்றும் 15 பெண் நீதிபதிகள் அடங்குவர்.


