News August 20, 2025

நர்ஸ் நிமிஷா பெயரில் போலி வசூல்: MEA Fact Check

image

கேரள நர்ஸ் நிமிஷா வழக்கில் மத்திய அரசின் பெயரில் போலியாக வசூல் நடப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏமனில் 2017-ல் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா கடந்த மாதம் 16-ம் தேதி தூக்கிலிடப்படவிருந்தார். மத்திய அரசின் தலையீட்டால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நிமிஷாவின் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் ஒரு கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களே உஷார்..!

Similar News

News February 15, 2026

‘அம்மா, நான் சாகப் போகிறேன்’

image

‘அம்மா, அப்பா என்னை மன்னியுங்கள். நான் தாத்தாவை சந்திக்கப் போகிறேன். என்னைத் தேட வேண்டாம். அருகிலுள்ள மயானத்தின் குளத்தில் நான் இருப்பேன்’. குருகிராமைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி நேஹாவின் கடைசி வரிகள் இவை. தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டபோது போலவே, அங்குள்ள குளத்தில் இருந்து மாணவியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தாத்தாவின் மறைவால் மன உளைச்சலில் இருந்த நேஹா, சோக முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

News February 15, 2026

முடி அடர்த்தியாக வளர இதை செய்யுங்க!

image

முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வறண்ட சருமத்துக்கு ரோஸ்மெரி இலை சிறந்த தீர்வாக இருக்கிறது. தலைக்கு குளித்த பிறகு, ஈரமாக இருக்கும் கூந்தல் மற்றும் வேர்க்கால்களில் ரோஸ்மெரி வாட்டரை ஸ்ப்ரே செய்யுங்கள். பிறகு தலையை மென்மையாக மசாஜ் செய்யவும். இதன் பிறகு தண்ணீரில் முடியை அலச வேண்டிய அவசியமில்லை. வாரத்திற்கு 3 முறை இதை செய்து வந்தால், ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெறலாம். SHARE IT

News February 15, 2026

அபிஷேக் OUT.. இந்திய அணிக்கு அதிர்ச்சி

image

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில், அதிரடி வீரர் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகியுள்ளார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!