News April 24, 2024
போலி வங்கிச் செயலிகள்; அரசு எச்சரிக்கை

போலியான வங்கிச் செயலிகள் மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணமோசடி நடப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. சைபர் செக்யூரிட்டி போன்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வப் பக்கங்களில், புழக்கத்தில் இருக்கும் union-rewards.apk, ausmallfinance.apk போன்ற போலிச் செயலிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, போலிச் செயலிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும். SHARE IT.
Similar News
News January 2, 2026
புதிய கட்சி தொடங்குகிறாரா ப.சிதம்பரம்?

Tvk, Cong கூட்டணியை ப.சிதம்பரம் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அவரது ராஜ்ய சபா MP பதவிக்காலம் 2027-ல் முடிவதால், மீண்டும் MP-ஆவதற்கு Dmk ஆதரவு தேவை. இதனால் Dmk கூட்டணியில் Cong நீடிப்பதை அவர் விரும்புகிறாராம். Tvk-வுடன் கூட்டணி அமைக்கும் முடிவை டெல்லி மேலிடம் எடுத்தால், சிதம்பரம் தலைமையில் ‘காங்கிரஸ் ஜனநாயக பேரவை’ உதயமாகும் என்றும் திமுகவுடன் அக்கட்சி கூட்டணி அமைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
News January 2, 2026
‘தமிழகத்தில் பொங்கல் பரிசாக ₹5,000’

பொங்கலுக்கு ₹5,000 கொடுக்க முடியாமல் TN அரசு திணறுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் தனியாரிடம் கடன் வாங்கியாவது பரிசுத் தொகை கொடுப்பார்கள் என விமர்சித்துள்ளார். முன்னதாக, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு ₹248 கோடி ஒதுக்கியது. இதையடுத்து, ₹3000 ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் இன்று வெளியடுவார் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
News January 2, 2026
பெட்ரோல் ஊற்றி கணவர் கொலை.. மனைவி வேதனை

வங்கதேசத்தில் இந்துக்கள் அமைதியாக வாழ விரும்புவதாக, தாக்குதலில் <<18734078>>உயிரிழந்த கோகோன் தாஸின்<<>> மனைவி சீமா தாஸ் தெரிவித்துள்ளார். யாருடனும் எந்த வாக்குவாதமும் செய்யாத தனது கணவரை எதற்காக மிகக் கொடூரமாக கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை என்று வேதனை கூறியுள்ளார். தனது கணவரின் தலையிலும், முகத்திலும் பெட்ரோல் ஊற்றி தாக்குதல்காரர்கள் தீ வைத்ததாக அவர் கண்ணீர் மல்கினார்.


