News April 21, 2025
அசலை மிஞ்சும் ₹500 கள்ளநோட்டு: அரசு எச்சரிக்கை

அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ₹500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சந்தையில் புழக்கத்துக்கு வந்துள்ள இந்த நோட்டில் ஒரு சிறிய எழுத்துப் பிழை மட்டுமே அது கள்ள நோட்டு என கண்டறிய உதவுகிறது. அசல் நோட்டில் ‘RESERVE BANK OF INDIA’ என இருக்கும். கள்ள நோட்டில் உள்ள ‘RESERVE’ல் E என்ற எழுத்துக்கு பதில் A என இருக்கிறது. உஷாரா இருங்க மக்களே!
Similar News
News December 31, 2025
ராணிப்பேட்டை: டூவீலர், கார் உள்ளதா?

ராணிப்பேட்டை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News December 31, 2025
2025 REWIND: ஒரே ஆண்டில் ₹43,200 அதிகரித்த தங்கம்!

ஜனவரி 1, 2025-ல் ஒரு சவரன் தங்கம் ₹57,200-க்கு விற்பனையான நிலையில், வருடத்தின் கடைசி நாளான இன்று ₹1,00,400-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஒரு சவரன் ₹43,200 அதிகரித்துள்ளது. அதே போல, ஜனவரி 1, 2025-ல் ஒரு வெள்ளி கிலோ ₹98,000-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹2,58,000-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் கிலோ ₹1,60,000 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 31, 2025
தலையீடு இல்லை: சீனாவுக்கு இந்தியா பதிலடி

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா-பாக்., இடையே மத்தியஸ்தம் செய்ததாக <<18719653>>சீனா தெரிவித்தது<<>>. இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் 3-ம் தரப்பு இடம்பெறவில்லை என்று இந்தியா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. சண்டை நிறுத்தம், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் ஆலோசித்த எடுத்த முடிவு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.


