News August 12, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து நியாயமான விசாரணை: டிஜிபி

image

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் குறித்து காவல்துறை நியாயமான முறையில் விசாரணை நடத்தி வருவதாக டிஜிபி சங்கர் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் காவல்துறை அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஜிவால், குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படுவர் என்றார். தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கொலைகள் குறைந்திருப்பதாகவும் கூறினார்.

Similar News

News March 5, 2026

விடுமுறை.. நாளை முதல் 3 நாள்களுக்கு அரசு அறிவிப்பு

image

சனிப்பெயர்ச்சி (மார்ச் 6), வார விடுமுறை நாள்களையொட்டி நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல வேண்டுமா? உங்களுக்காகவே அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை முதல் 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி, இணையதளத்தில் இப்போதே டிக்கெட் புக் பண்ணுங்க!

News March 5, 2026

T20 WC: இந்திய அணி பேட்டிங்!

image

பெரும் பரபரப்புக்கிடையே வான்கடேவில் நடக்கும் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய உள்ள இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது. இரண்டு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 5, 2026

தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் அறிவிப்பு

image

தவெகவில் மகளிருக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் மாநில அளவிலான 11 நிர்வாகிகளை புதிதாக விஜய் நியமித்துள்ளார். அந்த வகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஸ்பூர்த்தி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 10 இணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெகவின் மகளிர் படையின் செயல்பாடுகள் மற்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பமானமாக விளங்குவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!