News April 29, 2025
தமிழக உளவுத்துறையின் தோல்வி: இபிஎஸ் தாக்கு

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை கண்காணிக்கும் பணியில் மட்டுமே உளவுத்துறை பயன்படுத்தப்படுவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் கொலைகள், கொள்ளைகளை சுட்டிக்காட்டியுள்ள இபிஎஸ், சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் தமிழக உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதாக சாடியுள்ளார். தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு திணறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
பாஜகவுக்கு அதிமுக ஒத்து ஊதுவது ஏன்? எ.வ.வேலு

கூட்டணியின் காரணமாகவே பாஜகவின் செயல்பாடுகளுக்கு அதிமுக ஒத்து ஊதுவதாக எ.வ.வேலு விமர்சித்துள்ளார். சங்கி கொள்கையை EPS தாங்கிப் பிடிக்கும் காரணத்தினால் தான், பிற கட்சிகளில் இருப்பவர்கள் திமுகவிற்கு வருவதாகவும் அவர் பேசியுள்ளார். மேலும், தமிழகத்தில் திராவிட கொள்கையை திமுக மட்டுமே கடைபிடிப்பதாகவும் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
பிரிட்டன் PM-க்கு எதிராக சதியா?

பிரிட்டனில் இந்த மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நிதி பற்றாக்குறையை சந்திக்க வரிகள் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், PM கீர் ஸ்டார்மர்-ஐ பதவியில் இருந்து நீக்க, அந்நாட்டின் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை மறுத்துள்ள வெஸ் ஸ்ட்ரீட்டிங், தான் PM ஸ்டார்மரை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.
News November 12, 2025
IND Vs SA டெஸ்ட்: அரிதினும் அரிதாக நடந்த மாற்றம்

நவ.22 அன்று IND Vs SA டெஸ்டில், வழக்கத்திற்கு மாறாக போட்டி நேரம் மாற்றப்பட்டுள்ளது. டெஸ்டில் உணவு இடைவேளையை தொடர்ந்தே டீ பிரேக் கடைபிடிக்கப்படும். ஆனால் இந்த டெஸ்டில் முதலில் டீ பிரேக் காலை 11 – 11:20 மணி வரை, அடுத்ததாக மதிய உணவு இடைவேளை 1:20 – 2:00 மணி வரை கடைபிடிக்கப்படவுள்ளது. கவுஹாத்தியில் சூரியன் சீக்கிரமே உதயமாகி மறைவதால், 5 நாள்களும் போட்டியை காலை 9 மணிக்கே தொடங்க BCCI திட்டமிட்டுள்ளது.


