News December 5, 2024
இன்று பதவியேற்கிறார் ஃபட்னவிஸ்

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னவிஸ் இன்று பதவியேற்கிறார். CM பதவி யாருக்கு என்பதில், 10 நாள்களுக்கு மேலாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. ஃபட்னவிஸ் CM ஆக பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும். உடன் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்கிறார். ஷிண்டேவும் துணை முதல்வராக பதவியேற்பாரா என்பது தெரியவில்லை. பதவியேற்பு விழாவில், PM மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
Similar News
News January 4, 2026
பிக்பாஸில் இந்த வார எவிக்ஷன்.. இவர் தான்

பிக்பாஸில் பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என பேசப்பட்டது. ஆனால், ஷோ முடிய இன்னும் 2 வாரங்களே இருப்பதால் எவிக்ஷனை திட்டமிட்டுள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் நாமினேஷனில் இருக்கும் நிலையில், அரோரா மட்டும் TTF வென்று எவிக்ஷனிலிருந்து தப்பித்துள்ளார். இந்நிலையில், குறைந்த வாக்குகள் பெற்றதால் சுபிக்ஷா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
News January 4, 2026
₹5,000 தள்ளுபடி.. HAPPY NEWS!

LIC-யில் நீங்கள் எடுத்த தனிநபர் காப்பீட்டுக்கான பிரீமியத்தை கட்டாமல் விட்டுட்டீங்களா? இதனை புதுப்பிக்க சலுகைகளோடு புதிய திட்டத்தை 2 மாதத்திற்கு அந்நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. அதன்படி அபராத கட்டணத்தில் 30% (அ) அதிகபட்சம் ₹5,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. மார்ச் 2-ம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த தள்ளுபடியால் பல லட்சம் பேர் பலனடைவார்கள் என LIC தெரிவித்துள்ளது. அனைவரும் இதை SHARE பண்ணுங்க.
News January 4, 2026
வரலாறு படைத்த ருதுராஜ் கெய்க்வாட்

விஜய் ஹசாரே தொடரில் குறைந்த இன்னிங்ஸில் 100 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் அவர், தற்போதுவரை 57 போட்டிகளில் 105 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அதே நேரத்தில், இத்தொடரில், 100 சிக்ஸர்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். முதல் இடத்தில் மணிஷ் பாண்டே 108 சிக்ஸர்களுடன் உள்ளார்.


