News March 25, 2025
குணால் கம்ரா விவகாரத்தில் கொந்தளித்த ஃபட்னவிஸ்

மகாராஷ்டிர Dy CM ஷிண்டே குறித்து தெரிவித்த கருத்துக்கு நகைச்சுவை பேச்சாளர் <<15866964>>குணால் கம்ரா<<>> மன்னிப்பு கேட்க வேண்டும் என CM தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார். அரசியல் பதவிகளில் இருப்பவர்களை அவமதிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்த அவர், விளம்பரத்திற்காக இவ்வாறு செய்வதை குணால் கம்ரா வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News November 27, 2025
திண்டுக்கல்: டிகிரி இருந்தால் BOI வங்கியில் வேலை!

திண்டுக்கல் மக்களே, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (BOI), காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
செங்கோட்டையன் முடிவு தற்கொலைக்கு சமம்: செம்மலை

பழுத்த இலை விழுவதால் மரத்திற்கு எந்த சேதமும் இல்லை. அதுபோல செங்கோட்டையன் சென்றதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று செம்மலை தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது தற்கொலைக்கு சமமான முடிவு என்று விமர்சித்த அவர், தலைமைக்கே சவால் விடும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் இருக்கும் வரை கட்சியில் குழப்பம்தான் நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
News November 27, 2025
விவசாயிகளின் முதுகில் குத்தியவர் EPS: ரகுபதி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்து, விவசாயிகள் முதுகில் குத்தியவர் EPS என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நெல் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டிக்காமல், திமுகவை குறை கூறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய அரசு என்றால் அமைதியாக இருக்கும் EPS, திமுக என்றால் ஆவேசமாகி விடுவதாகவும் விமர்சித்துள்ளார். EPS-க்கு வீரத்தை ஊட்டுவதே திமுகவின் செயல்பாடுகள் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


