News April 24, 2024
Fact check.. மோடியின் குற்றச்சாட்டு உண்மையா? (2)

முஸ்லிம் பெண்கள் குழந்தை பெற்றெடுப்பு விகிதம் சராசரியாக 1998-99இல் 3.59%, 2005-06இல் 3.4%, 2015-16இல் 2.62%, 2019-21இல் 2.36% ஆக இருப்பதாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2019-21இல் இந்துப் பெண்கள் குழந்தை பெற்றெடுப்பு விகிதம் 1.94%ஆக இருப்பதாகவும் கூறுகிறது. அதாவது முஸ்லிம், இந்துப் பெண்கள் குழந்தை பெற்றெடுப்பு வித்தியாசம் 0.81%ல் இருந்து 0.42%ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது.
Similar News
News January 7, 2026
சேலையில் மிளிரும் ‘சிங்காரி’ ❤️❤️

‘றெக்க மட்டும் இருந்தா என் ஆளு தேவதை மச்சான்’ என்ற வசனத்திற்கு நடிகை மமிதா பைஜூ உயிர் கொடுத்திருக்கிறாரா என தோன்றுகிறது. இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்த ரீசண்ட் போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். வண்ணச் சேலையில் மின்னும் பூவாய் க்யூட்டான ரியாக்ஷன் கொடுக்கும் ‘விஜய்யின் ரீல் மகள்’ மமிதாவின் போட்டோக்களை மேலே ஸ்வைப் செய்து நீங்களும் பாருங்க!
News January 7, 2026
அமைச்சர் ரகுபதியை கண்டித்த அண்ணாமலை

நாவடக்கம் இன்றி திரியும் திமுகவினருக்கு, TN மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பை விமர்சித்து சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க வேண்டும், பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது என்று அமைச்சர் ரகுபதி பேசியது கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் X-ல் அண்ணாமலை சாடியுள்ளார்.
News January 7, 2026
யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்: EPS

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என EPS கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி அதிமுகவுக்கு சிலர் அவப்பெயரை ஏற்படுத்த முயல்வதாக EPS அறிக்கை வெளியிட்டுள்ளார். உழைப்பவர்களுக்கு முக்கியத்துவமும் அங்கீகாரமும் உரியநேரத்தில் தரப்படும் என்றும், நேர்காணலின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் கூறியுள்ளார்.


