News January 20, 2025
Fact Check: இந்தியாவில் ₹5 நாணயங்களுக்கு தடையா?

இந்தியாவில் ₹5 நாணயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் வதந்திகள் வலம் வருகின்றன. ஆனால், ரிசர்வ் வங்கி ₹5 நாணயங்களுக்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை. அதே சமயம், நிக்கல் உலோகத்தாலான தடிமனான ₹5 நாணயங்களை சிலர் வங்கதேசத்திற்கு கடத்தி பிளேட் தயாரித்து விற்கிறார்களாம். அதனால், நிக்கல் உலோகத்தாலான ₹5 நாணயங்களின் உற்பத்தியை RBI நிறுத்தி வைத்துள்ளது.
Similar News
News March 17, 2026
டீச்சருக்கு நடுரோட்டில் கொடூரம்.. தமிழகத்தில் அதிர்ச்சி

நெல்லையில் பட்டப்பகலில் டீச்சரை அவரது கணவரே அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடசேரியில் உள்ள அரசுப் பள்ளியில் டீச்சராக உள்ள முத்துசெல்வி, குடும்பத்தகராறு காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சேர்மன்துரை வள்ளியூர் பஸ் ஸ்டாண்டில் இக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். உயிருக்கு போராடிய டீச்சரை மீட்டு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.
News March 17, 2026
25 பெண் வேட்பாளர்களை களமிறக்குகிறதா திமுக?

பெண்களுக்கு தேர்தலிலும் அதிக முக்கியத்துவம் வழங்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். இதன்பேரில், திமுக அமைப்பு ரீதியாக செயல்படும் 77 மாவட்டங்களில், 3 மாவட்டங்களுக்கு ஒரு பெண் வீதம், 25 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை களமிறக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 12 பெண்களில் 6 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் 2 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
News March 17, 2026
தேர்தலும், நட்சத்திர பேச்சாளர்களும்

*தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான 7 நாள்களில் நட்சத்திர பேச்சாளர்கள் லிஸ்ட்டை ஒவ்வொரு கட்சியும் ECI-யிடம் கொடுக்க வேண்டும். *அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரையும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 20 பேரை நட்சத்திர பேச்சாளராக வைத்துக் கொள்ளலாம். *நட்சத்திர பேச்சாளர்கள் ஒரு தொகுதியில் பரப்புரை செய்கிறார்கள் என்றால், அவருக்கான செலவு வேட்பாளர் கணக்கில் வராது; கட்சியின் செலவாகத்தான் பார்க்கப்படும்.


