News April 18, 2025
FACT CHECK: UPI-க்கு GST?

₹2000-க்கு அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு GST வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. GPay, PhonePe மூலம் ₹2000-க்கு மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் நிதியமைச்சகம், அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று கறாராக தெரிவித்துள்ளது.
Similar News
News November 22, 2025
நெல்லை: விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு

விகேபுரம் அருகே காக்காநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும் அங்குள்ள யூனியன் கவுன்சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துக்குமார் கடந்த 19ம் தேதி விஷம் குடித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை முத்துக்குமார் உயிரிழந்தார். இது குறித்து விகே புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 22, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

கடந்த 2 நாள்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று(நவ.22) சவரனுக்கு ₹1,360 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,630-க்கும், சவரன் ₹93,040-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்தநிலை நிலவி வரும் சூழலிலும், இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவே நம்மூரில் தங்கம் விலை, மீண்டும் உயர காரணம் எனக் கூறப்படுகிறது.
News November 22, 2025
SA-ஐ எதிர்த்து களம் காணும் இந்திய படை இது தான்

IND vs SA மோதும் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. காயம் காரணமாக கில் வெளியேறிய நிலையில், பண்ட் தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அக்சர் படேலுக்கு பதிலாக நிதிஷ்குமார் அணியில் இடம்பெற்றுள்ளார். PLAYING X1: ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட், நிதிஷ்குமார், ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.


