News March 18, 2025
மிஸ்ட் கால் மூலம் PF இருப்புத் தொகை அறியும் வசதி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (PF) இருப்புத் தொகை எவ்வளவு உள்ளது என்பதை வீட்டில் இருந்தே எளிதில் அறிய முடியும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு ஆரம்பிக்கும்போது அளித்த செல்போன் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால், PF இருப்புத் தொகை குறித்து எஸ்எம்எஸ் உடனே வரும். அதை கொண்டு இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம். SHARE IT.
Similar News
News March 18, 2025
ரத்தத்தை சுத்தம் செய்ய சூப்பரான டிப்ஸ்…

*பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.
*இஞ்சி சாறுடன் தேன் கலந்து பருகலாம்.
*தர்ப்பைப் புல் கஷாயம் குடிக்கலாம்.
*அத்திப்பழம் தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியடைந்து உடல் பலம் பெரும்.
*வெந்தயம், பேரீச்சம்பழம், உருளைக் கிழங்கு, உலர் திராட்சை அடிக்கடி சாப்பிடலாம்.
*கீரை, முட்டை, சுண்டைக்காய், கிவி பழம், முழு தானியம் வெல்லம், ஈரல் ஆகியவை ரத்த சோகையை தடுத்து ரத்தத்தை சுத்திகரிக்கும்.
News March 18, 2025
புதினிடம் வலியுறுத்திய PM மோடி

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினை, PM மோடி வலியுறுத்தியதாக போலந்து வெளியுறவு அமைச்சர் டோபில் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தலையிட்டதற்காக PM மோடியை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News March 18, 2025
மார்ச் 18: வரலாற்றில் இன்று!

*1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 2 ஆண்டுகளில் விடுதலையானார்.
*1858 – டீசல் எஞ்ஜினை கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்.
*இந்திய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்.
*உலக மறுசுழற்சி தினம்.
*ஆசிரியர் நாள் (சிரியா)
*ஆண்கள் மற்றும் போர் வீரர்கள் நாள் (மங்கோலியா)