News March 27, 2025
பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்குக்கு திடீர் தடை!

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் வெளியாகும் தவறான கருத்து, ஆபாசப் படங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும் நோக்கில் இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. பேஸ்புக்கிற்குத் தடை விதிப்பதன் மூலம், மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசு முடக்குவதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
Similar News
News March 30, 2025
கோடை விடுமுறையில் இதை செய்யுங்க: பிரதமர்

கோடை விடுமுறையின் போது புதிய பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு, திறமைகளை மேம்படுத்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடி, தான் சிறு வயதில் கோடை விடுமுறையை புதியதாக எதாவது ஒன்றை கற்றுக்கொள்ள பயன்படுத்தியதாகவும் நினைவுகூர்ந்தார். கோடை விடுமுறைக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள ‘My Bharat’ காலண்டரை பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.
News March 30, 2025
21ம் நூற்றாண்டில் பூகம்பத்தால் இதுவரை 6 லட்சம் பேர் மரணம்!

டிச. 26, 2004ல் இந்தோனேசியாவை தாக்கிய பூகம்பத்தால் 2.30 லட்சம் பேரும், ஜன. 12, 2010ல் ஹைட்டியைத் தாக்கிய பூகம்பத்தால் 3 லட்சம் பேரும் இறந்தனர். அதே போல, மே 12, 2008ல் சீனா மற்றும் அக்.8, 2005ல் காஷ்மீரில் தாக்கிய பூகம்பத்தால் தலா 87 ஆயிரம் பேரும் இறந்தனர். பிப். 6, 2023ல், துருக்கி மற்றும் சிரியாவில் 62 ஆயிரம் பேர் இறந்தனர். ஜன. 26ல் 2001குஜராத்தில் 20 ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.
News March 30, 2025
பள்ளிகளுக்கு முன்கூட்டியே இறுதித் தேர்வு

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாகப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்.9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள், ஏப்.7 முதல் 17ஆம் தேதி வரை நடத்தப்பட்டு முன்கூட்டியே விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.