News October 25, 2024
திருமணத்தை மீறிய உறவு… ஏன்?

திருமணத்தை மீறிய உறவு ஏற்பட இவை முக்கிய காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்: *இளம்வயதில் திருமணம் *விருப்பமில்லாத திருமணங்கள் *உடல்ரீதியான திருப்தியின்மை (60%) *உணர்வுரீதியாக தம்பதியினர் ஒன்றாதது *பொதுவான விழுமியங்கள் இல்லாதது *வாழ்க்கை முன்னுரிமைகளில் மாறுபாடு *பொதுவான ஆர்வங்கள் இல்லாதது *‘த்ரில்’ தேடும் மனநிலை *புறக்கணிப்பு (அ) அங்கீகரிக்கப்படாத உணர்வு *குழந்தை வளர்ப்பு சிரமம். வேறு காரணங்கள்?
Similar News
News December 9, 2025
FLASH: பங்குச்சந்தைகள் கடும் சரிவு

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-வது நாளாக கடும் வீழ்ச்சியை கண்டுள்ளன. சென்செக்ஸ் நேற்று 600 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்றும் 682 புள்ளிகள் சரிந்து 84,682 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 229 புள்ளிகள் சரிந்து 25,730 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. Shriram Finance, Asian Paints, TCS உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் 5% வரை சரிவைக் கண்டுள்ளன.
News December 9, 2025
வாழ்த்து கூறி கூட்டணியை உறுதி செய்த ஸ்டாலின்

சமீபகாலமாக காங்., தலைவர்கள் அடுத்தடுத்து விஜய், SAC-யை சந்தித்ததால், தவெக கூட்டணியில் காங்., இணையலாம் என பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, கூட்டணி வலுவாக இருப்பதை CM ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவிற்கான கூட்டு முயற்சிகளை சோனியாவின் கொள்கை ரீதியான பாதையும் வழிகாட்டுதலும் தொடர்ந்து வலுப்படுத்தட்டும் என தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
BREAKING: விஜய் கூட்டத்தில் போலீசார் தடியடி

புதுச்சேரியில் விஜய் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் சூழல் உருவானது. ஒரு பாஸுக்கு 2 பேருக்கு அனுமதி என தவெக நிர்வாகிகள் கூறியதாகவும், ஆனால் ஒரு பாஸுக்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் கூறியதால் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.


