News April 19, 2025
திருமணத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றமில்லை: DL HC

திருமணத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றமில்லை என்று டெல்லி ஹைகோர்ட் (DL HC) தெரிவித்துள்ளது. மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி, கணவர் தொடுத்த மேல்முறையீட்டு மனு மீது HC தீர்ப்பளித்தது. அப்போது, ஏற்கெனவே இதேபோன்ற இன்னொரு வழக்கில் உச்சநீதிமன்றம் திருமணத்தை மீறிய உறவு தனிநபர் ஒழுக்கம் சார்ந்த பிரச்னை, கிரிமினல் குற்றமில்லை என கூறியிருப்பதை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்தது.
Similar News
News November 26, 2025
திருவாரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன்

நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று விளையாடி கொண்டிருந்த போது 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருந்த பள்ளியில் அடைத்தனர்.
News November 26, 2025
வேலூர்: இளைஞர்களிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண்!

வேலூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.17.5 லட்சம் மோசடி செய்த காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் சுமதி என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மோசடி உறுதி செய்யப்பட்டதால், அந்த பெண்ணை கைது செய்து, மேற்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 26, 2025
இப்படி விளக்கேத்துங்க.. வீட்டில் அதிர்ஷ்டம் சேரும்!

தினமும் மாலை சரியான திசையில், சரியான முறையில் விளக்கேற்றினால், வீட்டில் அமைதி, செழிப்பு & லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும் என வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. தினமும் மாலை வீட்டின் பிரதான நுழைவாயில் அருகில் பசு நெய்யால் விளக்கு ஏற்றுவது மிகவும் புனிதமானதாம். இதனால், லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைகிறார் என்றும், வீட்டின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து செல்வத்தை கொண்டு வரும் எனவும் நம்பப்படுகிறது.


