News April 4, 2024
மக்களிடம் இருந்து பணம் பறிப்பு

கடந்த நிதியாண்டில் வங்கிகள் அபராதமாக மட்டும் சுமார் ₹35,000 கோடியை வசூல் செய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச கட்டணம் இல்லை, எஸ்.எம்.எஸ் சர்வீஸ்கள், கூடுதலாக ஏடிஎம் மையங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு அபராதம் மற்றும் சேவைக் கட்டணமாக இந்தத் தொகை வசூலிக்கப் பட்டுள்ளது. குறைந்தபட்ச தொகை இல்லை என்பதற்காக மட்டும் ₹21,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
‘ஜனநாயகன்’ டிக்கெட் வாங்க ரெடியா?

ஜன. 9-ம் தேதி வெளியாகும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், நாளை டிரெய்லர் வெளியாகவுள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு வரும் 4-ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு, மற்ற மாநிலங்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
News January 2, 2026
FLASH: 2,700 பேர் மரணம்

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கு முன் யாராலும் தப்ப முடியாது. 2025-ல் இயற்கை சீற்றங்களால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரத்தை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓராண்டில் மட்டும் 2,760 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், புயல், கனமழை, வெப்ப அலை என அதிதீவிர வானிலை நிகழ்வுகளே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
News January 2, 2026
செல்லூர் ராஜுவை முந்திவிட்டார் KAS: சாமிநாதன்

விஜய்யை CM பதவியில் அமர வைப்பதே தனது இலக்கு என செங்கோட்டையன் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், காங்கேயத்தில் இதுகுறித்து பேட்டியளித்த அமைச்சர் சாமிநாதன், விஜய்யை நிரந்தர முதலமைச்சர் ஆக்குவேன் என செங்கோட்டையன் கூறி வருவது சிறந்த நகைச்சுவை என்று விமர்சித்துள்ளார். காமெடி செய்வதில் செங்கோட்டையன், செல்லூர் ராஜுவை பின்னுக்கு தள்ளிவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


