News April 4, 2024
சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை – நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 25ஆம் தேதி வரை (வியாழக்கிழமைகளில்) சென்னை எழும்பூரில் இருந்து காலை 05.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
Similar News
News April 20, 2025
தேர்தலுக்கு மட்டுமே பாஜக கூட்டணி: SP வேலுமணி

2026-ல் இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும் என அக்கட்சியின் மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இருப்பது தேர்தலுக்கான கூட்டணி எனத் தெரிவித்த அவர், வக்ஃப் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்து இருப்பதாகக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
News April 20, 2025
சே குவேராவின் தன்னம்பிக்கை வரிகள்!

▶ விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையெனில் உரம். ▶ எங்கெல்லாம் அடக்கப்படுபவர்களின் குரல் கேட்கிறதோ? அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும். ▶ புரட்சி என்பது பழுத்தவுடன் விழும் ஆப்பிள் பழம் அல்ல, நீங்கள்தான் அதை விழ வைக்க வேண்டும். ▶ அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். ▶ சொல்லின் சிறந்த வடிவம் செயல். செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை.
News April 20, 2025
ஜம்மு – காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு – காஷ்மீரில் 3.1 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, தஜிகிஸ்தான் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். அண்மை காலமாக ஆசிய கண்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.