News May 17, 2024
பொது இடமாறுதலுக்கான அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று (மே 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் வாய்ப்பளிக்கப்படாது எனவும் கூறப்பட்டிருந்தது. இதுவரை 63,433 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
உரிமைகளை தாரைவார்க்க தயாரான திமுக: அன்புமணி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது கவலையளிக்கிறதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் திமுக அரசு வழக்கம் போலவே அமைதி காத்து, உரிமைகளை தாரை வார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறதாகவும் சாடினார்.
காவிரி பாசன விவசாயிகளின் அச்சத்தை திமுக அரசு உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 23, 2025
வரலாற்றில் இன்று

*1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
*1956 – அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர்.
*1980 – இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4,800 பேர் உயிரிழந்தனர்.
*2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
News November 23, 2025
SPORTS 360°: ஆஸி., ஓபன் இறுதி போட்டியில் லக்ஷயா சென்

*இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. *ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென் இறுதி போட்டிக்கு முன்னேறினார். *வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ODI தொடரை 3-0 என நியூசிலாந்து அணி கைப்பற்றியது. *அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் வங்கதேசம் அணி உள்ளது.


