News May 3, 2024
ஆதாரில் இலவசமாக திருத்தம் செய்ய அவகாசம் நீட்டிப்பு

ஆதாரில் இலவசமாக திருத்தம் செய்வதற்கான அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்துக்குள் முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை இலவசமாக மேற்கொள்ளலாம், அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய ரூ.25 வசூலிக்கப்படும், ஆஃப் லைனில் திருத்தம் செய்ய ரூ.50 வசூலிக்கப்படுமென்று ஆதார் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் நாளை(நவ.17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்றிரவோ (அ) நாளை காலையோ தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 16, 2025
BREAKING: விஜய் – உதயநிதி மோதல்

திமுக சார்பில் நடைபெற்றுவரும் அறிவுத் திருவிழாவை விமர்சித்த விஜய்க்கு, உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். தவெக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுக நடத்துவது அறிவுத் திருவிழாவா? அவதூறு திருவிழாவா? என விமர்சித்திருந்தார். இந்நிலையில், அறிவு இருப்பவர்கள் திருவிழா நடத்துவார்கள், தவெகவினருக்கு அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜி என உதயநிதி மறைமுகமாக விஜய்யை சாடியுள்ளார்.
News November 16, 2025
ஆண்மை குறைவு வரும்.. ஆண்களே இதை செய்யாதீங்க

கடந்த 50 ஆண்டுகளில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை சராசரியாக 62% ஆகக் குறைந்துள்ளதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. இதற்கு 90% காரணம், ஆண்களின் 7 பழக்கவழக்கங்கள் தானாம். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


