News September 25, 2025
முப்படைகளின் தலைமைத் தளபதி பதவிக்காலம் நீட்டிப்பு

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் 2026 மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முப்படை தளபதியாக இருந்த பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பின், 2022 செப்டம்பரில் அனில் சவுகான் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார்.
Similar News
News September 25, 2025
லோகோவை மாற்றிய சுசுகி

22 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்டோமொபைல் நிறுவனமான சுசுகி தனது பிராண்ட் லோகோவை மாற்றியுள்ளது. 1958 முதல் பயன்பாட்டில் உள்ள S-வடிவ லோகோ முதன்முதலில் 2003-ல் மாற்றப்பட்டது. தற்போது புதிதாக ஷார்ப்பான வடிவத்தில் இருந்து பிளாட்டாக ‘S’ லோகோ மாற்றப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் ஸ்லோகனும் ‘உங்களின் பக்கம்’ என மாற்றப்பட்டுள்ளது.
News September 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 469
▶குறள்: நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
▶பொருள்: ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.
News September 25, 2025
விஜய்யின் பரப்புரை பயணத்தில் மாற்றம்

விஜய்யின் கடலூர் பரப்புரை பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு நவ.22-ம் தேதி திட்டமிட்டிருந்த இந்த பயணம் அக்.11-ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் தலைமை தபால் நிலையம், உழவர் சந்தை ஆகிய இடங்களில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு, கடலூர் எஸ்.பி.க்கு தவெக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் விஜய் கரூர் மற்றும் நாமக்கல்லில் பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.