News April 30, 2024

அவதூறு வழக்கின் மீது தடை நீடிப்பு

image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 6 வாரங்களில் மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை இடைக்காலத் தடை தொடரும் என்றும் கூறி வழக்கை செப்.9ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Similar News

News January 27, 2026

விசில் சத்தம் கொஞ்ச நேரம்தான் வரும்: கடம்பூர் ராஜூ

image

அதிமுக ஊழல் கட்சி என தவெக கூட்டத்தில் விஜய் பேசிய பின், அதிமுக நிர்வாகிகள் கடுமையான பதிலடியை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் விசில் சத்தம் எவ்வளவு வேகமாக வருகிறதோ, அதே வேகத்தில் போய்விடும் எனவும், அதுபற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம் என்றும் EX அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். ஏற்கெனவே <<18963533>>செல்லூர் ராஜு<<>>, ராஜன் செல்லப்பா ஆகியோர் விஜய்யை சாடியிருந்தனர்.

News January 27, 2026

உரிமைத் தொகை உயர்வு.. CM ஸ்டாலின் ஹேப்பி நியூஸ்

image

சென்னையில் இன்று & நாளை நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை, CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பை CM வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, ₹1,000 உரிமைத் தொகை உயர்த்தப்படும் என ஸ்டாலின் கூறியிருந்தார். அதேநேரம், வரும் தேர்தலில் மகளிர் வாக்குகளை கவரும் வகையில் வாக்குறுதிகளை திமுக தயார் செய்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

News January 27, 2026

ரேஷன் கார்டு வகையை மாற்றுவது எப்படி?

image

PHH, AYY வகை ரேஷன் கார்டுகளுக்கு அனைத்து அத்தியாவசிய ரேஷன் பொருள்களும் கிடைக்கும். NPHH கார்டுக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும். பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் இந்த கார்டுகளை மாற்ற <>tnpds.gov.in <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருமான சான்றிதழ் தேவை. தகவல்களை உள்ளிட்ட பிறகு, அட்டையை மாற்றும் காரணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ரேஷன் கார்டு மாறிவிடும். SHARE.

error: Content is protected !!