News April 7, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் பதில்

TN முழுவதும் இன்னும் சில நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை காலம் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், காலநிலை மேலாண்மை குழு பரிந்துரை அடிப்படையில், பள்ளி திறப்பு குறித்தும், விடுமுறை நீட்டிப்பு குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார்.
Similar News
News April 8, 2025
ஏப்ரல் 08: வரலாற்றில் இன்று

➤1277 – வேல்சின் டொல்ஃபோரின் அரண்மனை ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது. ➤1820 – பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது. ➤1906 – அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் இறந்தார். ➤1993 – மாக்கடோனியக் குடியரசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது. ➤ 2000 – அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானதில் 19 கடற்படையினர் உயிரிழந்தனர்.
News April 8, 2025
ட்ரம்பை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். வரி உயர்வுக்குப் பின் டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் நெதன்யாகுதான். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை இஸ்ரேல் நீக்கும் என நெதன்யாகு தெரிவித்தார். சீனா வரிவிதிப்பை குறைக்கவில்லை என்றால் எங்கள் முடிவு மிகவும் மோசமாக இருக்கும் என டிரம்ப் எச்சரித்தார்.
News April 8, 2025
குறைந்த செலவில் சுற்றுலா செல்லலாமே…

இந்த அவசர உலகில் சுற்றுலா செல்ல யாருக்குத்தான் பிடிக்காது. ஒரு நாள், 2 நாள் விடுப்பு கிடைத்தால்கூட குறைந்த பட்ஜெட்டில் எளிதாக சென்றுவரக்கூடிய பல சுற்றுலா தலங்கள் நம் தமிழ்நாட்டிலேயே உள்ளன. குறிப்பாக ராமநாதபுரத்தில் உள்ள குருசடை தீவு, சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு ஏரி, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள குண்டாறு அணைக்கட்டு உள்ளிட்ட மனதிற்கு இதமளிக்கும் பல இடங்கள் தமிழகத்தில் உள்ளன.