News June 2, 2024
கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் முடிந்த நிலையில், திகார் சிறையில் சரணடைந்த கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21இல் கைது செய்யப்பட்ட அவர், மக்களவைத் தேர்தலைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் பெற்றார். அது நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அவர் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 20, 2025
மிரட்டி பாக்குறீங்களா CM சார்? விஜய்

திருச்சி, அரியலூரில் பவர் கட் செய்த திமுக அரசு, RSS தலைவர்கள், மோடி, அமித்ஷா ஆகியோர் வந்தால் இவ்வாறு செய்யுமா என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். நாகையில் பேசிய அவர், பஸ்ஸுக்குள்ளேயே தான் இருக்கணும், கையை இவ்வளவுதான் தூக்கனும் என்று காமெடியான ரூல்ஸ் போடப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், மிரட்டி பாக்குறீங்களா CM சார்? என்று நேரடியாக கேட்ட அவர், அதுக்கு விஜய் ஆளு இல்ல என்று பேசினார்.
News September 20, 2025
கவர்ச்சி ஆடை அணிந்தாலே அவ்வளவுதான்: வேதிகா

நடிகைகள் கவர்ச்சியான ஆடை அணிந்தாலே ‘ஓ அப்படியா’ என பேச தொடங்கிவிடுவதாக நடிகை வேதிகா வேதனையுடன் கூறியுள்ளார். தான் கூட அவ்வப்போது பிகினி அணிவதாக தெரிவித்த அவர், தவறான புத்தி கொண்டவர்கள் மாறினால் நல்லது என்றார். மேலும், விமர்சனங்களுக்கெல்லாம் நான் கவலைப்படமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இறுதியாக ‘காஞ்சனா 3’ படத்தில் பரவலாக அறியப்பட்ட இவர், இன்ஸ்டாவில் கிளாமர் போட்டோஸால் டிரெண்டிங்கில் உள்ளார்.
News September 20, 2025
பள்ளி மாணவர்களுக்கு மாதம் ₹2000… உடனே இதை பண்ணுங்க

<<17712443>>அன்பு கரங்கள்<<>> திட்டம் மூலம் ஆதரவற்ற/கைவிடப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ₹2000 தருகிறது தமிழக அரசு. 1-12ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறலாம். இதற்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹96000-க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் இணைய, அவரவர் பகுதிகளில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் (அ) ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE.