News October 27, 2024
நிறுவனங்கள் வரி செலுத்த அளித்த காலக்கெடு நீட்டிப்பு

கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நவ.15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய, அக்.31ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News February 6, 2026
5 லட்சம் பேரை திரட்டி திரும்பி பார்க்க வைப்பாரா சீமான்?

விஜய்க்கு மட்டுமா கூட்டம் வரும், நான் கூட்டுறேன் பாரு என 5 லட்சம் பேரை திருச்சியில் திரட்ட சீமான் திட்டமிட்டுள்ளாராம். இளைஞர் வாக்கு வங்கியை குறைத்து விடக்கூடாது என்பதில் தீர்க்கமாகவுள்ள சீமான், 234 தொகுதிகளில் இருந்தும் தலா 1,000 பேரை மாநாட்டுக்கு அழைத்துவரும் அசைன்மென்டை அந்தந்த வேட்பாளர்களிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 140 ஏக்கரில் நடக்கவுள்ள மாநாட்டில் கெத்து காட்டுவாரா சீமான்?
News February 6, 2026
அப்போ CBI, இப்போ IT.. விஜய்க்கு அடுத்தடுத்து சிக்கல்!

கரூர் வழக்கில் CBI அலுவலக படியேறிய விஜய்க்கு IT-ன் வரி ஏய்ப்பு வழக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2015-ல், ₹15 கோடி வருவாயை மறைத்ததாகவும், அதற்கு விதிக்கப்பட்ட ₹1.50 கோடி அபராதத்தை ரத்து செய்யக்கோரி விஜய் <<19064663>>தொடர்ந்த வழக்கு தள்ளுபடி<<>> செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவரது கடைசி படமான ‘ஜன நாயகன்’ சென்சார் விவகாரத்தால் வெளியாகாமல், வழக்கில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 6, 2026
விஜய் Black Money வாங்கியது உண்மை: அதிமுக மாஜி

தான் எழுப்பிய பல கேள்விகளுக்கு செங்கோட்டையன் இன்னும் பதிலளிக்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். செங்கோட்டையன் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றவர், விஜய் கருப்பு பணம் வாங்கியவர் என ஏற்கனவே தான் சொன்னதாக கூறிய அவர், அதற்கு பதிலளிக்காமல் தன்னை விமர்சிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர் என்றார். மேலும், விஜய் கருப்பு பணம் வாங்கியது உண்மை எனவும் தடாலடியாக தெரிவித்துள்ளார்.


