News August 19, 2024
சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை அவகாசம் நீடிப்பு

முதுநிலை சட்டப்படிப்பு (LLM) மாணவர் சேர்க்கை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சட்டக் கல்லூரிகளில் 2 ஆண்டு முழுநேர சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான அவகாசம் இன்று வரை (ஆக.19) இருந்தது. இந்நிலையில் இந்த அவகாசம் வரும் 31ம் தேதி வரை சட்டக்கல்வி இயக்ககம் நீட்டித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு சட்டக்கல்வி இயக்கக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 3, 2026
விஜய் மீது 2 வழக்குகள்.. வேட்புமனுவில் புதிய தகவல்

தன் மீது 2 குற்ற வழக்குகள் இருப்பதாக திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார். மதுரை மாநாட்டில் பாதுகாவலர்கள் தள்ளியதில் ஒருவர் காயமடைந்தது தொடர்பான வழக்கும், கொளத்தூரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர்பான மற்றொரு வழக்கும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மதுரை மாநாடு தொடர்பான வழக்கை பெரம்பூரில் அவர் தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது.
News April 3, 2026
தந்தையின் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை: யுவராஜ்

தோனி, கபில்தேவ் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரை பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகளை யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனிமனித சாதனையை விட அணியின் நலனும் தலைமையின் முடிவுமே முக்கியம் என கூறியுள்ளார். இதன் மூலம் தனது தந்தையின் கருத்துகளில் இருந்து மாறுபடுகிறேன் என ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார்