News August 24, 2024
கட்சியில் இருந்து நீக்கம் : ஜெகன் அதிரடி

பெற்ற மகளையே வன்கொடுமை செய்த ரவியை ஏற்கெனவே கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி விளக்கமளித்துள்ளார். அவருக்கும், புரட்சி பாரதத்துகும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவரின் பெயருடன் கட்சி பெயரை பயன்படுத்தி, தவறான தகவலை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
இன்று ஒரே நாளில் இந்தியா, பாக்., போர் ஒத்திகை

பஹல்காம் தாக்குதலால் பாக்.,- இந்தியா இடையே போர் பதற்றம் தொற்றியது. பாக்., பின்வாங்கியதால் தாக்குதல் கைவிடப்பட்டது. தற்போது அமெரிக்கா சென்றுள்ள பாக்., ராணுவ தளபதி அசிம் முனிர், இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்நிலையில், அரபிக் கடலில் இந்திய கடற்படை இன்று போர் ஒத்திகையில் ஈடுபடுவதாக அறிவித்தது. இதனால் பதறிப்போன பாக்.,கும் இன்றே போர் ஒத்திகையில் ஈடுபடபோவதாக கூறியுள்ளது.
News August 11, 2025
இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்

இந்தியாவுடனான மோதலுக்கு பின் 2-வது முறையாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார். இதனிடையே, இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் அணு ஆயுதத்தை வைத்து பாதி உலகையே அழித்து விடுவோம் என அசிம் முனிர் எச்சரித்துள்ளார். சிந்து நதியில் இந்தியா அணை கட்டும் வரை காத்திருப்போம் என கூறிய அவர் கட்டிய பின் ஏவுகணைகளால் அதை அழித்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
BREAKING: தங்கம் விலை ₹560 குறைந்தது

கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று தலைகீழாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹75,000-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹9,375-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ₹127-க்கும், கிலோ வெள்ளி ₹-1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.