News April 16, 2024
எதிர்மறை வளர்ச்சியைக் கண்ட ஏற்றுமதி

2024 மார்ச்சில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (சரக்கு & சேவை) ₹5.86 லட்சம் கோடியாக (70.21 USD) மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகத் துறை அமைச்சக புள்ளிவிபரங்களின்படி, 2023 மார்ச்சுடன் ஒப்பிடுகையில், 3.01% எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது. வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 41.68 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு 28.54 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News April 29, 2025
9 செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபட்டால்….

9 செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை பெருக்கி, செவ்வாய் தோஷம் பாதிப்புகளை குறைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள்.
News April 29, 2025
பப்ளிசிட்டி இல்லாமல் உதவும் அஜித்.. ஜனாதிபதி புகழாரம்

பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது X தளத்தில், தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் அஜித், பல்துறை நடிகர்களில் ஒருவராக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சினிமாவைத் தாண்டி பப்ளிசிட்டி இல்லாமல் பல தொண்டு செயல்களை அஜித் செய்து வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
News April 29, 2025
விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அரசு புதிய ஆணை

சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தரக்கூடாது என்ற உத்தரவை TN மின்சாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது. ஏப்.8-ல் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் இடையே எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.