News September 8, 2025
EXCLUSIVE: பாஜகவில் இருந்து விலகல்.. அடுத்த திட்டம் என்ன?

25 ஆண்டு கால பாஜகவுடனான பயணத்தில் இருந்து <<17645797>>Ex MLA சாமிநாதன்<<>> திடீரென விலகியது, புதுவை அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இது குறித்து Way2News அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஊழல் இல்லாத புதிய ஆட்சியை அமைக்க தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட பயணத்தை தொடங்க உள்ளேன் என்றார். TVK-வில் சேர உள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, இப்போதைக்கு இல்லை எனவும் நிச்சயம் மாற்றம் இருக்கும் என அதிரடி காட்டியுள்ளார்.
Similar News
News September 9, 2025
BreakUp ஆன பிறகு காதலர்கள் சேர.. இத ட்ரை பண்ணுங்க

*பிடித்த இடத்திற்கு வரவழைத்து நடந்தவற்றை மறுபரிசீலனை செய்து, தவறை திருத்த முயலுங்கள் *அவர் தான் பேச வேண்டும் என விடாப்பிடியாக இருக்காமல், நேரம் எடுத்து தவறுகளை சரிசெய்து மீண்டும் புதிதாக தொடங்குங்கள் *மாறி மாறி குற்றம்சாட்டாமல், உடனே மன்னிப்பு கேளுங்கள் *இருவரும் அதிக நேரம் ஒதுக்கி, உங்களை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் *நடந்து முடிந்த விஷயங்களை பேசாதீர்கள். எதையும் வெளிப்படையாக பேசுங்கள்.
News September 9, 2025
தனுஷின் பேச்சை கேட்க ரெடியாகுங்க..!

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் ஆடியோ லாஞ்ச் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.14-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. அக்.1-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். தனுஷின் ஆடியோ லாஞ்ச் பேச்சுக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?
News September 9, 2025
செங்கோட்டையன் புதிய அதிமுக: செல்வப்பெருந்தகை

இபிஎஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் திடீர் திருப்பமாக டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், பாஜக எங்கெல்லாம் உறவு வைக்கிறார்களோ, அங்கே எல்லாம் கூறு போடுவது தான் வழக்கம் என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். ஏற்கெனவே அதிமுகவை நான்காக வைத்து இருக்கிறார்கள் இப்போது ஐந்தாவது அதிமுகவாக செங்கோட்டையன் தலைமையில் உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.