News March 21, 2025
#Exclusive.. முதல்வர் வெளிநாட்டு பயணச் செலவு விவரம்

மே 7, 2021இல் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து, அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்காக தமிழக அரசு ₹7.12 கோடி செலவிட்டுள்ளது. இதில் பயணம், தங்குமிடம், விசா மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் அடங்கும் என்று RTI மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், அவரது துபாய் பயணச் செலவு குறித்து எந்த தகவலையும் அரசு வெளியிடவில்லை. இதை அரசியல் ரீதியாக விவாதப்பொருளாக மாற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News September 16, 2025
யுனெஸ்கோவில் சேர்க்கப்பட்ட 7 இந்திய தளங்கள்

இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் யுனெஸ்கோ 7 புதிய இயற்கை தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. *டெக்கான் ட்ராப்ஸ்(மகராஷ்டிரா) *செயின்ட் மேரி தீவு (கர்நாடகா) *மேகலாயன் ஏஜ் குகைகள்(மேகாலயா) *நாகா ஹில் ஓபியோலைட் (நாகலாந்து) *சிவப்பு மணல் மேடுகளான எர்ரா மட்டி டிபாலு (ஆந்திரா) *திருமலை மலைகள் (ஆந்திரா), *வர்கலா (கேரளா)
News September 16, 2025
ரஜினி பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்?

‘காலா’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷிக்கு, அவருடன் நீண்ட நாள்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்த ரசித் சிங்குடன் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரசித் சிங், நடிப்பு பயிற்சி வழங்குபவராக உள்ளார். இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இணைந்து பங்கேற்றதால், இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது. இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களும் வைரலானது.
News September 16, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க