News January 11, 2026
EXCLUSIVE: விஜய்க்கு நிம்மதி.. முக்கிய தகவல் கசிந்தது

கரூர் விவகாரத்தில் விஜய்க்கு அனுப்பப்பட்ட CBI-ன் சம்மன் குறித்த முக்கிய தகவல் கசிந்துள்ளது. விஜய்க்கு BNSS 179 பிரிவின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, விஜய் குற்றம் செய்த நபர் இல்லை. ஆனால், குற்றம் நடந்த விதம், குற்றம் தொடர்பான தகவல் விஜய்க்கு தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது. அதனால், அவர் நீதிமன்றத்தை நாடாமல் <<18824844>>நாளை காலை விசாரணையை<<>> எதிர்கொள்ள உள்ளாராம்.
Similar News
News January 29, 2026
விஜய் இப்படி பண்ணா ‘ஜன நாயகன்’ படம் வராது: பாஜக

முறையான ஆவணங்களை கமிட்டியிடம் சமர்ப்பித்தாலே ’ஜன நாயகன்’ படத்துக்கு தேவையான சான்றிதழ் கிடைக்கும் என விஜயதாரணி கூறியுள்ளார். வேண்டுமென்றே பாஜக மீது பழி சொல்வதாக கூறிய அவர், தேவையற்ற அரசியல் செய்வதை கைவிட வேண்டும் என்றார். அப்படி அரசியல் செய்துகொண்டே இருந்தால் படம் வராமல் போய்விடும் எனவும் விஜய் தனித்து போட்டியிவதுதான் தங்களது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 29, 2026
கனிமொழி – ராகுல் காந்தி சந்திப்பில் நடந்தது என்ன?

ராகுல் காந்தியுடன் கனிமொழி நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், கடந்த முறை 25-ல் போட்டியிட்டு 18-ல் வென்ற காங்கிரஸ் இம்முறை 30 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் கேட்டு உறுதியாக இருக்கிறதாம். ஒருவேளை கூடுதல் சீட்களை கொடுக்க திமுகவுக்கு உடன்பாடு இல்லையெனில் 25 தொகுதிகள் + 2 ராஜ்ய சபா சீட் கேட்பதாக தகவல் கசிந்துள்ளது.
News January 29, 2026
விபத்துக்கு பின் விமானங்கள் தீப்பிடித்து எரிவது ஏன்?

விமானங்கள்/ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளான உடனேயே தீப்பிடித்து எரிந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், அவற்றில் உள்ள எரிபொருள் தான். விமானங்கள் அதிவேகத்தில் பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டால், எரிபொருள் தொட்டிகள் உடைந்து எரிபொருள் வெளியேறுகிறது. அதேநேரம் என்ஜினில் உள்ள வெப்பம் அல்லது உராய்வு காரணமாக ஏற்படும் தீப்பொறிகள் உடனடியாக எரிபொருளில் பரவி தீப்பிடிக்கின்றன.


