News December 4, 2024
EXCLUSIVE விருதுநகரில் 8124 பேர் வேலையிழப்பு

விருதுநகர் தொழிலப் பாதுகாப்பு அலுவலக ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 530 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 16,642 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 2020 முதல் 2024 அக்டோபர் வரை 3942 பாட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் விதிமீறல் காரணமாக 171 தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில் இதில் பணியாற்றிய 8124 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இத்தகவல்கள் அனைத்து RTI மூலம் பெறப்பட்டவை.
Similar News
News November 19, 2025
பள்ளி மாணவர்களுக்கு நெகிழி தீமை குறித்து விழிப்புணர்வு

அருப்புக்கோட்டை நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக இன்று வெள்ளக்கோட்டை செங்குந்தர் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு நெகிழி தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி நெகிழி பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News November 19, 2025
அருப்புக்கோட்டையில் கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

அருப்புக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்மார்ட் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் இன்று (நவ.19) நகராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
விருதுநகர்: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை

விருதுநகர் மக்களே, ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 முதல் 33 வயதுகுட்பட்டவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளைக்குள் (நவ. 20) <


